எரியும் சலனங்கள்

Posted: January 31, 2013 in எழுத்துப்பிழைகள்

fire-2

எப்போதோ எரித்துப் போட்ட கடிதத்தின்

வரிகள் நினைவுகளில்

அலையாட கணக்கிறது மனம். .

ஏந்திக் கொள்ளவோ, ஏற்றிவிடவோ அறியாத

முகங்களுக்கு என்றும் நேரமிருப்பதில்லை. .

மறந்தும் மறுப்பு சொல்லாமலிருக்க பழகிவிட்ட

இதயங்களுக்கும், தூரமிருந்தாவது என் கண்ணீரை

துடைக்க எத்தனிக்கும் கைவிரல்களுக்கு

என்னில் வழிந்தோடும் கண்ணீரின்

கன அளவு தெரிந்தாலும் அஃதின் வெப்பம் தெரிவதில்லை. .

என் பயணங்களை தாங்கிச் செல்லும் காரணிகள்

எல்லாவற்றையும் சவப்பெட்டிக்குள் அடக்கிச்

செய்ய வைத்த காலத்தோடான பாதையிலேயே

என் பாதங்களை பதிக்கிறேன். .

ஏற்றிச்செல்லவோ,ஏந்திக்கொள்ளவோ ஓர்

தென்றல் இல்லையேனும் ஓர் புயலாவது

நிச்சயம் என் வழியினூடே வந்து சேரும் என்ற

நம்பிக்கையோடு அணைக்கிறேன்

இருள் சூழ வேண்டி

இன்றைய விளக்கை. .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s