Archive for February, 2013

ந்த அதிகாலை பொழுது இவ்வளவு அர்த்தமற்றதாக அமையும்என்று அவன் எதிர்பார்க்கவில்லை. .கலைத்துப்போட்ட பொருட்கள் அரை முழுவதும் சிதறிக்கிடந்து கோபமூட்டியது. .

எதோஒரு பெண்ணின்குரல் மெலிதான மல்லியின் அழுத்தத்தைபோல்அவன் மண்டையியினுள் உலவுவதை உணர்ந்தான். . அதிகாலை பறவைகள் சில தம்துணையோடு இரை தேடபறந்துகொண்டிருந்தன . .கசாப்பு கடைகளுக்காக பிடித்துச் செல்லப்படும் சில கோழிகள் மௌனமாய் தம் மரணங்களை எதிர்நோக்கி தவம் செய்வது போலான அமைதியில் நிறைந்திருந்தது. . உணவுப்பழக்கங்களில் தன்னை அடிமை ஆக்கிக்கொண்டு உடம்பு பெருத்து அதனுடன் போராட முடியாமல் சாலைகளில் நடைபழகும் கூட்டமொன்று எச்சில் துப்பி, இக்காலஅரசியலை டீக்கடைகளுக்கு போட்டியாக கிழிதெடுதுக் கொண்டிருந்தது. .

நீர் பிடிக்க வரும் பெண்டிர், பாடம் படிக்கும் பருவதேர்வு உடைய மாணாக்கர், பால் பாக்கெட் ஆசாமியின் வழிநடக்கும் நாளிதழ் போடுபவன், திருப்தியாக உறங்க போகும் இரவு காவலர் தாத்தா, காலடியில் கொஞ்சம் விலகிவிட்ட போர்வையை இழுத்து போர்த்தும் பெரும் போராட்டத்தில் மல்லுகட்டிகொண்டிருக்கும் அரை நண்பன். .  துயிலெழுந்த அறுபது வினாடிகளில் புறத்தின் அத்துணை அழகையும் கண்ணில் கண்டு உணர்ந்த அவனால் தன் அக அழுக்கை உணரவே முடியவில்லை. .தான் ஏன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்தோம் என்பதை உணரவே முடியவில்லை . .சுற்றும் மற்றவர்கள் உறக்கதில் திளைப்பதை பார்த்து கோபமும் சுய இறக்கமுமே அவனிடம் மிஞ்சியது . .

ஒரு வாலி நிறைய குளிர் நீரைக்கொண்டு வந்து இன்னும் தூங்குபவர்கள் மீது கொட்டி விடலாமா என்று கூட யோசிக்கும்அளவுக்கு கோபமிருந்தது. .மின்சாரம் நிறுத்தப்பட்டதற்கு அடையாளமாக தூங்காமல், அவனுக்கிருந்த ஒரே துணையான மின்விசிறியும் தன் இயக்கத்தை நிறுத்தி மாண்டது. .

இறுதியாக. .

EBகாரன் சரியா ஒம்போது மணிக்கு புடுங்கிவச்சுடறான். .இன்னும் என்ன தூக்கம் வாழுது என்று நீளும் இலகுவான அந்த குரல் இடியின் பலத்தை கடன் வாங்கி வந்ததைப்போல முழங்க ஆரம்பித்திருந்தது. .

கடல். .

xxx

மணிரத்னம் இயக்கம் என்று தெரியவந்ததில் இருந்து எல்லோரும் மிகுதியாகவே எதிர்பார்த்திருந்த படம். . திரைக்கதை அமைப்புக்கும்,உணர்வுமிக்க காட்சிகளுக்கும்,இசையை சரியான விகிதத்தில் பயன்படுத்த தெரிந்த இயக்குனர் என பெயர் பெற்றவரின் படம் என்பதோடும் முந்தைய ராவணன் பெரிதாக எடுபடவில்லை என்பதால் அடுத்த அடியை கவனமாகவே வைப்பார் என்பதும், இசைப்புயல்-வைரமுத்து-மணிரத்னம் -மெட்ராஸ்டாக்கீஸ் கூட்டணி என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளிவந்த படம். .

இன்று. .

கடலில் உப்பில்லை என ஒருசேர விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. .லாஜிக் தவறுகள்,தொடர்பில்லா காட்சிகள் வசனங்களுக்கும் பேசுவோரின் மேனரிசங்களுக்கும் சம்பந்தம் சிறிது விட்டுப்போவது, புரியாத திரைக்கதை என ஏகப்பட்ட விமர்சனங்கள் வைத்தாலும் கடல் என்னளவில் வெறுக்க முடியாத ஓர் படைப்பே. .

மணிரத்னம் மீது வீசப்படும் ஆற்றாமை புகார்களும்,விமர்சனங்களும் சரி, அழகினிலும் அழகு சேர்ந்து கொள்ளை அழகான கதாநாயகியை பேசும்போதும் சரி,இசைப்புயலின் சமாதான பங்களிப்பும் சரி,வைரமுத்துவின் வரிகளுக்கும் சரி. .எல்லோரும் திரைக்கதை அமைத்த எழுத்தாளர் ஜெயமோகனின் பங்களிப்பை மறந்தே விட்டனர். .அது எத்தகைய ஆழமான களம் என்பதையோ அதன் பெருமைகளையோ சொல்லத் தவறிவிட்டனர். .

ஜெயமோகன் இந்த விசயத்தில் தரம் தாழ்ந்திருக்கலாம். .தன பணியை சரிவர செய்யாமலிருக்கலாம் . .ஆனாலும் திரைக்காக எழுதப்படாத ஓர் கதையை திரைக்கதைக்கு உபயோகிக்கும் இந்த முயற்சி ஏற்புடையதே. .

இந்த சுட்டியை சொடுக்கி ஜெயமோகனே சொல்லியிருப்பதை படியுங்கள். .ஓர் இயக்குனர் தனக்கென ஒரு வகை படங்களை தெரிவு செய்து இயக்கி கொண்டே இருந்தால் கொஞ்ச காலத்திலயே அலுப்பு தட்டி விடும் என்று பேசும் அதே விமர்சகர்கள் தான் மணிரத்தினம் இந்த களத்தில் நின்றதற்க்கோ , கடலிலே இருந்து மீளாமல் மூழ்கி இறந்ததற்க்கோ மீண்டும் முரணாய் விமர்சித்தனர். .
mani
சில கதைகள் கமர்ஷியலை தழுவி எடுக்கப்பட்டு வணிக,ரசிக ரீதியாகவும் பெரும் வெற்றி அடைகின்றன. .சில இதில் ஏதோ ஒன்றில் மட்டுமே ஜெயிக்கின்றன. .ஆனால் அந்த படைப்பை பற்றி எல்லா கோணங்களிலும்  பார்வை செலுத்திட மட்டும் மறந்து போகின்றோம். .ஜெயமோகன் சொன்னபடி இந்த
படம் முழுக்க முழுக்க தத்துவார்த்த அடிப்படையே. .
நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டம். .
தாந்தேவின் “divine comedy ” யிலிருந்து புனையப்பட்ட கதைக்களம்0  இது. .
இதைதானே காலா காலமாக பார்த்து சலித்திருக்கிறோம்  என்று ஒற்றை வார்த்தையில் கூறி ஒதுக்கி விட முடியாது. .கலைக்காக,கலையை ரசிக்கும் ரசிகனுக்காக மட்டுமே  படம் எடுக்க  முனைந்த காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது. . ரசிகனை எப்பாடுபட்டாவது டிக்கெட் எவ்வளவு விலை ஆயினும் சென்று படம் பார்க்க வைக்க மட்டுமே நடக்கும் சூது தான் இன்று நடப்பவைகள் எல்லாம். .
நன்மை தீமை அவை சார்ந்த நம் செயல் பாடுகள் . .அவை நம் மீது செலுத்தும் ஆதிக்கங்கள். .அதனால் வரும் விளைவுகள். .
நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும்  போராட்டத்தின் பேரலைகளில்  சிக்கி தவிக்கும் ஒருவனை தேவதை ஒருவள் வழிநடத்தி கரை சேர்ப்பதே . கதைக் களம் . .அதே களனை அச்சுபிசகாமல் (தழுவலா திருட்டா. .??
பேச்சு வழக்கு . .பூர்விகம் என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்க்கலாமே. .!) புனையப்பட்ட இந்த முயற்சி வரும்காலத்தில் பலவற்றிற்கு வழிகோலலாம். .

இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. .கேடு கெட்டதாக இருந்தாலும் இந்த முயற்சியை வெறுத்து ஒதுக்க மனம் இல்லை எனக்கு. .

படம் முடிந்து வெளியேறியபின்னும் மணிரத்னத்தின் ரசிகன் என்று சொல்ல எந்த கூச்சமும் இல்லை எனக்கு. .காலம் சொல்லும் கதைகளை படைத்தது அவற்றை காவியமாய் உலவவிட்டவர் சிறிது சருக்கியிருப்பினும் பொறுத்தால வேண்டியது தவறில்லை என்றே எனக்கு படுகிறது. .
ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்னு ஒரு பழமொழி உண்டு . .அப்படி ஒரு கொண்டாட்டமான வாழ்கைதான் இணைய சேவை நிறுவனங்கள் நமக்கு போட்டி போட்டு வழங்கி வந்தன. .நாமும் “வேறொன்றும் அறியேன் பராபரமே ” என பயனர் கணக்கை வைத்திருந்தோம். .

எல்லாம் சரி. .
இந்த வார்த்தை உங்களுக்கு என்ன என தெரியுமா. .?? தெரியாது. .இருங்க கூகிளாண்டவர் கிட்ட கேட்டுட்டு வாரேன் என வெய்ட்டீஸ் விட்டுட்டு போக நெனைசின்கன்னா இத பத்தி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமானவர்கள் லிஸ்ட்ல நீங்களும் உண்டு. .ஏன்னா இந்த வார்த்தையே கூகிளோட (அதிபயங்கர ??!!)அட்டகாசத்த பத்திதான். .
376646757_1280
காலம் போக போக இணையம் சார்ந்த வசதிகளும் அதை நுகரும் இணைய பயனீடாளர்களும் பெருகிக்கொண்டே வந்தனர். .
இணையம் பக்கம் அதிகம் சார்ந்திருத்த பயனர்களும் வணிக ரீதியான பயன்பாடுகளும் பெருகிக்கொண்டே இருக்கும் போது இணையம் நமக்கான
தகவல் பரிமாற்ற களமாக மாறிவிட்ட இன்று அனைவருக்கும் உள்ள ஒரே மனக் காய்ச்சல் நமது அந்தரங்க தகவல்களும் நாம் பரிமாறிக்கொள்ளும் தகவல்களும் பாதுகாப்பாக இருக்கிறதா என்பதுதான். .நடுவில் தகவல் திருட்டு நடப்பதை தடுக்க தகவல் பரிமாற்ற  சேவை வழங்கும் நிறுவனங்கள் நமக்கு (நம் தகவல்களுக்கு ) பாதுகாப்பை அளிக்கின்றன. .
ஆனால் நமக்கு அச்சேவையை வழங்கும் நிறுவனமே நமது தகவல்களை ஆராய்ந்து பார்த்தாலோ,மூன்றாம் நபருக்கு பணத்திற்காக எடுத்து கொடுத்தாலோ எப்படி இருக்கும். .??? என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும். .
அதை போன்ற ஓர் நிகழ்வுதான் இந்த வார்த்தை. .முன்னணி தேடுபொறி பயன் சேவை அளிக்கும் கூகிள் தனது ஜிமெயில் வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடுகிறது என MICROSOFT பகிரங்கமாகவே குற்ரம் சாட்டி மக்களின் ஆதரவை பெற உருவாக்கிய இணைய வார்த்தை தான் மேற்ச்சொன்னது . .
கூகிள் சொல்லிட்டுதான் இந்த வேலை பார்க்கிறது என்றாலும் பலரால் ஜீரணிக்க முடியாத விசயமாகிப்போயவிட்டது

மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் விளம்பரங்களை பொருத்தினால் விற்பனை அதிகரிக்கும் என போட்டியில் நிறுவனங்களும் தங்களது பொருட்களை இணைய சந்தையில் விளம்பரப்படுதலாகின. .

ஆனால்  தன வசம் உள்ள பயனர்களின் மின்னஞ்சல்களை  விளம்பரங்களை பதிப்பதற்காக ஆராய்ந்து பார்க்கிறது மற்றும் மின்னஞ்சல்களூடே  நாம் அனுப்பும் அ பெறும்  விஷயத்திற்கு சம்பந்தப்பட்ட விளம்பரங்களை அளிக்கிறது. மேலோட்டமாக பார்த்தல் நமக்கு வேண்டிய விஷயங்கள் நாம் தேடமலே கைக்கு கிடைக்கிறதென போல் தெரிந்தாலும் கொஞ்சம் யோசித்தால் உண்மை புரியும். .
எப்படி நாம் பேசும் விஷயத்திற்கு சம்பந்தப்பட்ட விளம்பரங்களை நம் கணக்கில்  பெறுகிறோம். .??
ரொம்ப தேடினாலும் கிடைக்கிற விடை எளிமையானது. .நாம் பேசும்(அனுப்பும்) விஷயங்களை கூகிள் அலசி ஆராய்ந்து KEYWORDS எனப்படும் முக்கியமான வார்த்தைகளை குறித்துக்கொண்டு அது சம்பம்தப்பட்ட விளம்பரதாரர் தகவல்களை  நமக்கு தெரியுமாறு பார்த்துக்கொள்கிறது. .
உதாரணத்திற்கு. .
(நன்றி:scroolged.com  )
மேலுள்ள படத்தில் சிரப்புக்கூறிட்ட வார்த்தைகளை பாருங்கள். .அந்த மின்னஞ்சலோடு சேர்ந்திருக்கும் விளம்பரங்களை பாருங்கள். .எளிதில் புரியும். .சுமார் 430

அதிகமான பயனர்களை  கொண்டிருக்கும் கூகிள் எப்படி ஒவ்வொருவரையாக பார்த்து விளம்பரம் அனுப்புகிறதா என கேட்காதிர்கள் . .அனைத்தும் ப்ரோக்ராம்கள் தான். .ஆனால் எந்த நொடியிலும் கூகிள் பயனர்களில் அந்தரங்க தகவல்களை கூகிளில் பணிபுரியும் அலுவலர்களால் பார்க்கப்படலாம் . .(திருடப்படலாம்) என மைக்ரோசாப்ட் அலறுகிறது. .
இப்போ என்ன ஆகிடுச்சுனு கேக்கறிங்களா .?? நீங்க மேலே பார்த்த இனைய சுட்டி பகிரங்கமாகவே கூகிளின் இந்த
செயல்களை விமர்சித்து மென்பொருள் ஜாம்பவான் மைக்ரோசப்டினால்  உருவாக்கப்பட்டது. .தனது OUTLOOK .COM
விளம்பரப்படுத்துவதற்கு இந்த புகார் பெரிதும் பயன்படும் என நம்புகிறது. .தனது வசதிகளில் பயனர்களின் தகவல்களை
தான் அலசி ஆராய்வதில்லை என திடமாக அறிவித்துள்ளது அதை விட பயனர்களிடம் கையெழுத்து இயக்கம் மற்றும் தங்கள் அனுபவங்களை பகிர்ந்திட வழிஏற்ப்படுத்திக் கொடுத்திருப்பது தான்  கூகிளுக்கு கொஞ்சம் தலைவலியை உண்டாக்கியிருக்கிறது. .
இனைய உலகின் பயனர்களின் தனிமனித கட்ற்றட்ட்ற சுதந்திரத்தை ஒருகாலத்தில் தாங்கிப்பிடித்து வந்த கூகிள் என்று இப்படி மாறியிருப்பது அதன் வளர்ச்சிக்கு பெரும் சவால் தான். .ஆனால் அதன் வலைப்பூவும் சரி வசதிகளின் தகவல்களும் சரி இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை என்பது உண்மை. .88% ஜிமெயில் பயனர்கள் தங்கள் தகவல்களை கூகிள் களவாடுகிறது என்பதை நம்பகூட தயாரில்லை என்பது தான் தலையில் அடித்துக்கொள்ள வைக்கும் முரண். . சத்தமில்லாமல் பேஸ்புக்கும் இதைதான் செய்துகொண்டிருக்கிறது என்பது அதன் பயனர்களில் 35% கூட தெரியாது என்கிறது ஓர் அறிக்கை. .
கூகிளுக்கு எதிராக இந்த விஷயத்தில் வழக்குகளும் பதிவு செயயப்பட்டு கலக்கிக் கொண்டிருக்கின்றன. .
11_19_08_306_file
இணைய உலகில் நிகழப்போகும் மாற்றங்களை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு அதன் சட்ட திட்டங்களில் ஏற்படப்போகும் மாற்றங்கள் நிச்சயம் வியப்பளிப்பதாகவே இருக்கும். .

விளக்கொளியில் மங்கித்தெரியும்

வண்ணத்துப்பூச்சியின் நிறங்களாய்

சோதனை காலங்களில்

மனிதனின் மனமும். .

love-inspirational-daily

காதல். .

அருங்காட்சியகத்தில்
வைக்கப் பட வேண்டிய
பழங்கால பொருள். .

அகத்தால் மட்டுமே
புலப்படும்
ஆராய்ச்சிப் பொருள். .

கண்கள் செய்யும்
காட்சிப் பிழை. .

கண்ணீர் தரும்
கானல் கனவுலகம். .

முதல் வந்தால்
காவியம். .
மீண்டு
மீண்டும் வந்தால்

காயங்களின் மருந்து. .

இறக்கும் வரை வரும்
வியாதி. .
அஃது இயற்கை நியதி. .

கண்டவுடன் வந்தால்
காமத்தின் வெளிப்பாடு. .
புரிந்துணர்ந்து வந்தால்
தவம்புரிந்த வந்த
வரம். .

அன்பின் பரிணாம வளர்ச்சி. .

காமக் கவிதைகளின்
முதல்வரி. .

உணர்ச்சிகளால் ஒப்பனையிடப்பட்ட
வெறும் சொல். .
கேள்விகளை தொலைத்த

விடைகள். .

விடியல்கள் புலப்படா
இரவுகள். .

இதயச்சூட்டில் வளரும்
தாவரம். .
பட்டு விட்டாலும்
வேர்களால் கொல்லப்படும் இதயம். .

சிலரால் அழகினாலும் வரையறுக்கப்படும். .

அர்த்தங்கள் இன்றியும்
பொருள்படும். .

ஐந்தாவது வேதம். .
ஒன்பதாவது அதிசயம். .
பழம்பெரும் கொலைக்கருவி. .

காதல். .
எச்சில் இலை. .
கற்பக விருட்சம். .

ஆக்கூடுதலாக. .
பெண்மை போல்
காதல்
ஒரு OXYMORON. .

 

 
 
‘பொய்’களுக்கு
 கொஞ்சம் 
பட்டி டிங்கரிங்
 ஓர்க் பாத்து
 வெள்ளையடிச்சு 
விற்பதற்கு பெயர்தான்
 ‘சத்தியம்’
 செய்தல் 

 

பஞ்சாபில் மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் தன்னை பற்றிய கருத்துகள் காரணமாக தற்கொலை செய்துகொண்ட நிகழ்வினை ஏந்திய
ஓர் பதிவின் தூண்டுதலால் இந்த கட்டுரையை எழுத முனைகிறேன். .
read the news. .

 

 

 

எந்தவொரு இனமும் அடிமை விலங்கை அறுத்தெறிய முற்படும் போது தம்மை ஆதிக்கம் செலுத்தும் விஷயம் மீது குற்றம் கூற ஆரம்பிக்கும். .

அதே உருவகத்தை பெண்களால் உருவாக்கப்பட்டு,வளர்க்கப்பட்டு இன்று சிறிது சிறிதாய் மீண்டும் புணரமைக்கப்படும் வார்த்தையான ‘ஆணாதிக்கம்’ என்பதோடு இணைக்க முற்படுகிறேன். .

ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைகளாய் நடத்தினோம் என்று எந்த ஆணும் மார்தட்டி இன்று கூற முனைவதில்லை. .
பெண்களை உயர்ந்த உயிராக பழைய காலங்களில் மதித்தோம். .பெண்மை என்ற சொல்லுக்கு வலுசேர்க்கும் தாய்மை என்ற வார்த்தைக்காக அனைத்தினும் உயர்வாக எண்ணி மகிழ்ந்தோம். . புராணங்களில் தேவதைகளில் தொடங்கி பராசக்தி என்பது வரை மதிப்பளித்தோம். .
இடைப்பட்ட காலங்களில் பெண்ணடிமைத்தனம் வளர்த்தோம். .விதிகள் விதைத்தோம். . அங்கீகாரம் மறுத்தோம். .
இன்னும் எதை வேண்டுமானாலும் இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். .
..
இன்று. . . . .  . . 

கடந்த பதினைந்து ஆண்டுகளாக எல்லா துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி விண்ணைமுட்டி ஆண்களுக்கு எந்த தொழிலிலும் சவால் விடும் அளவு இருக்கிறது. .

ஆயினும்,இன்றளவும் மனோபலத்தை வளர்த்துக்கொள்ளாமல்,சுய நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ளாமல் செயல்படும் பெண்கள் அதிகளவில் உள்ளனர். .
அத்தகையோருக்குள் மீண்டும் புலப்பட்டு புணரமைக்கப்படும் வார்த்தையே ‘ஆணாதிக்கம்’. .

ஆண்களால் உண்டாக்கப்படும் துன்பங்களுக்கு அணைகட்டி காவல் காக்க பெண்களுக்கு வசதிகள் ஓராயிரம் செய்துவிட்டாயிற்று. .
சரிசமமாக சமுதாயத்தில் பங்குபெற,அங்கம் வகிக்க வழிகள் வகுத்தாயிற்று. .
எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு சிறு,பெரு தடைகள் வரும்போது ஆண்களை குற்றவாளி ஆக்கி வைப்பது ஏன். .?

பெண்களை அடிமைகளாக பாவித்த காலத்தில் ஆணாதிக்கம் பற்றி பிதற்றியது பொருள்படகூடியது. .
இன்று. .??

பேருந்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிரும் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் அது குற்றம். .
ஆண்களுக்கு தனியொரு இட ஒதுக்கீடு கிடையாது. .
அதில் பெண்கள் அமர்ந்தால் கேட்கக் கூடாது. .அது மாபெரும் குற்றமாம். .
ஏழு இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்படும் கிராம பேருந்துகளில் கூட சகித்துக்கொள்ளக்கூடிய இது ஒரு பக்கம் முழுவதும் ஒதுக்கப்படும் மாநகரப் பேருந்துகளிலும் தொடர்வது ஏன். .?

ஆண்களின் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் பெண்களை நோக்கி கேள்வியெழுப்பினால் அது ஆணாதிக்கம் ஆகிவிடுகிறது ஏன். .?

வரதட்சினை கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப் பட்டு பல திருத்தங்களுக்கு உள்ளானது யாரால். .?
பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்ட பெண்களால்தான். .

பொதுநாகரீகம் பார்க்காமல் சத்தமாக பேசும்,தன் இஷட்த்திற்கு செயல்பட்டு விட்டு போகும் பெண்களை தட்டிக்கேட்டால் அது ஆணாதிக்கமாக மாறிவிடுவது ஏன். .?
ஈவ் டீசிங் புகார் கொடுப்பேன் என மிரட்டுவது என்ன பொருள். .?

பெண்களுக்காக வழங்கப்பட்ட சட்டங்களை,வாய்ப்புகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு நிலைமை கைமீறினால் ஆணாதிக்கம் என்ற வார்த்தையை கையிலெடுப்பது தார்மீக குற்றமில்லையா. .?

பெண்கள் வளருவதை யாரும் தடைசெய்யப்போவதில்லை. .தடை செய்தாலும் தட்டிவிட்டு வளரும் பக்குவம் பெண்களிடம் வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை. .

ஆயினும் தன் தவறுகளை மறைக்க ஆணாதிக்கம் என்ற வார்த்தையை கேடயமாக பயன்படுத்துவது தான் இன்று அதிகமாகி விட்டது. .

தன்னை நோக்கி கல்லெறிந்தாலும் தாண்டிச் செல்லும் மனோபக்குவத்தை வளர்த்துக்கொள்ளாமல் எதையும் ஆணாதிக்கம் பற்றியே பேசி நாட்கள் கடத்துவது பயனற்றது. .

சமவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புலம்பல்கள்தான் ஆணாதிக்கம் என்ற வார்த்தையின் தூண்டுகோலாக மாறுவது ஏன். .?

வெறும் கேடயமாக மட்டுமே பயன்படுத்தப் படும் அந்த வார்த்தையை பாடித்திரிவது பெண்களுக்கே நஷ்டம். .

தங்கள் திறமைகளை பண்புகளை வளர்த்துக்கொண்டு பெண்கள் முன்னேறுவது சாலச்சிறந்தது. . ஆணாதிக்கம் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டே வளர நினைப்பது மடமை. .

ஆணாதிக்கத்திம் என்ற ஆதிக்கத்தை எதிர்ப்பதாக நினைத்தே பெண்களும் ஆதிக்க வரம்பில் கால் பதிக்க துவங்கிவிட்டனர். .

மாறப்போகும் காலம் பதிலிடட்டும் இந்த கட்டுரையின் தலைப்புக்கு. .!!

ஈகி முத்துக்குமாருக்கு என் வணக்கங்கள். .

muthukumar-01

யாதும் ஊரே யாவரும் கேளிர் என விளம்பினான் ஓர் தமிழ்க் கவிஞன். .

செய்யுளின் பொருட்டு மாணாக்கராக இருந்த போது அதை படித்தவர்களும் பெரியவர்களாகிப் போனபின் மறந்தனரோ இல்லை ஏற்க மறுத்தனரோ, தானுண்டு தனதுண்டு என்றே வாழ்ந்து சென்றனர் . .

உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம். .

தலைவலி என்பது வந்தால்தான் அதனால் அவஸ்தையுறுபவன் பற்றி நமக்கு புரிகிறது. .
இதை உணர்ந்து வைத்திருந்தாலும் ஈழ மக்கள் நம்மிடையே பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். .
எம் சகோதரர்கள் சாகிறார்களே என நாம் வாய்ச்சவடால் மட்டுமே விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் செயலில் எதிர்பார்த்து நொந்துக் கொண்டிருந்தனர் உயிரோடவாது இருக்கும் ஏனைய ஈழ உறவுகள். .
இத்துனைக்கும் அவர்களை காப்பாற்றி கரை சேர்ப்பது நம் கடமை எனும் நிலைமை இருந்த வேளையிலே சிங்கள

கயவர்களோடு நாமும் சேர்ந்து ஈழ மக்களை வஞ்சித்த நிலை கண்டு பதறாத சாமான்யன் தமிழகத்தில் இல்லை. .
மௌனம் காப்பதோ,அறைக்கூவல் விடுத்தோ தன வேலையே பார்க்க செல்லாமல் தினம் தினம் அவன் மன அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாது போலும். . தன்  உள்மனதின் கெஞ்சலை போராட்டமாக,அறிக்கையாக,வேண்டுதலாக பல கணங்களில் வெளிப்படுத்திப் பார்த்த்தான் எம் சகோதரன் ஒருவன். .நிலை மாறவில்லை. .
கேட்கவேண்டிய காதுகள் வேண்டுமென்றே அடைப்பட்டிருந்தன. .வேண்ட வெறுப்பாக தம் சக சகோதரர்கள் வஞ்சிக்கப்படுவதை எண்ணி எண்ணி மனம் வெறுத்து தன்னையே தீயிலிட்டு  தன ஆதிக்க வர்கத்தின் மீதான எதிர்ப்பையும் போர் என்ற பெயரில் மொத்தமாக இன அழிப்பு செபவர்களை தடுத்து நிறுத்த வேண்டியும் இன்னுயிர் ஈந்தான். .

அதை தியாகம் என விளிப்பதா,கோபம் என விளிப்பதா இல்லவேயில்லை அது ஓர் பைத்தியக்காரத்தனம் போன்ற   குழப்ப நிலைக்கு தயவுகூர்ந்து செல்லாதீர்கள். .
சட்ட மன்றத்தில் நடந்த அதற்க்கான உரையாடலையோ, தமிழினம் காக்க பிறந்த தலைவர்களின் அறிக்கைகளையோ நினைவுகூறி எம் சகோதரனின்   உயிரை அசிங்கப்படுத்த வேண்டாம். .

வழக்கம் போல மனிதனின் உருவத்தை நினைவு கூர்ந்து அவர்தம் படத்திற்கு மாலையிட்டு மகிழ்வதை விட அவரை அதுவரை வாழவைத்த,தன இன்னுயிரை ஈன வைத்த கொள்கை என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள், முடிந்தால் நினைவில் நிலை நிறுத்தி கடைபிடியுங்கள். .
அவர்தம் கொள்கைபிடிப்பின் கனத்தை உணர்வோமாயின் அவரின் அந்த செயல் நமக்கு புரியும். .இல்லையேல் போரில் மாண்ட ஆயிரமாயிரமவரில் அவர் உயிரும் மறையைக்கூடும். .

வல்லமை தாராயோ என அவன் புலம்பி தன்னால் ஏதும் செய்ய முடிய வில்லையே என்ற ஏக்கத்தோடே தன்னுயிரை ஈன்றா வது  போர் என்ற பெயரில் இன அழிப்பு செய்யும் சிங்கள அரசாங்கத்தை நோக்கி குரல் கொடுக்க திரானியற்ற இந்திய அரசை,தமிழ் வாழனும் தமிழன் சாகனும் என்ற எண்ணம் கொண்டிருந்த தமிழக அரசை கவனிக்க வைக்க இப்படியொரு முடிவெடுத்தான் . .
அவன் மனம் ஈழத்தில் தம் சகோதரர்கள் அழிவதை கண்டு கதறி யிருக்ககூடும். .தன மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அழுதிருக்க வேண்டும். . தன் கொள்கை குரல் கேட்கவேண்டியவர்  காதிலும் கேட்காமல் இருந்திருக்க கூடும் . . அந்த முடிவுக்கு நாமும் ஓர் காரணமே. .

 29_01_09_muthukumar_129_01_09_muthukumar_229_01_09_muthukumar_3 (1)29_01_09_muthukumar_4
சாதாரண மனிதர்களாகிய நமக்கு  எதனால் என்ன பயன்  என்றோ நம்மால் என்ன செய்து கிழித்திட முடியும் என்றோ எண்ணாமல் நாம் மறந்திட்ட  “நெஞ்சுரம்” என்ற சொல்லை நமக்கு நினைவூட்டிச்சென்ற எம் சகோதரனுக்கு எம் நன்றிகளை பாதத்தில் சமர்ப்பிக்கிறேன் . .