வலிகளின் தடம்..#1

Posted: March 14, 2013 in பார்வை பலசரக்கு. .
Tags: ,

xx

போராட்டங்கள் என்பது போட்டி உலகில் சாதாரணமாகவே வியாபித்திருக்கிறது. .ஆனால் உலகின் பெரும் குடியரசு என்று மார்தட்டும் இந்தியாவின் சட்ட வடிவில் வழங்கப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பறிக்கப்பட்டபின் உலகின் பெரும் உரிமையான போராட்டத்தை நாமாகவே கையிலெடுக்க வேண்டிய சூழல். . தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு சம்பாத்யம் என தாணுன்டு தனதுண்டு என்றே முந்தைய தலைமுறை நம்மை பழக்கப் படுத்த எத்தனிக்கும் இச்சூழலில் அடுத்தவர் நலனுக்காக போராடும் இக்குணம் அளப்பரியது. . எப்போதோ தொடங்கியிருக்க வேண்டிய போராட்டமிது. . கால இடைவெளியில் எத்துணையோ நாடகங்கள்,திமிருக்கு சாணைபிடித்தல் நடந்தேறிவிட்டன. .

ஆயினும் கிடைத்த கடைசி வாய்ப்பாய் இதை பற்றிக் கொண்டது மகிழ்ச்சி. .!

தமிழீழத்தின் ஆதரவும் பிரபாகரனை ஆதரிப்பதும் ஒன்றுதான். .ஆயினும் மாற்றுக்கருத்துகள் பல ஆணித்தரமாக வந்தாலும் செயற்கரிய செயல் நாடிழந்த,வீடிழந்த,உறவிழந்த ,உறுப்பிழந்த உயிரைக்கூட காவு கொடுத்த அப்பாவி மக்கள் மீதான உணர்ச்சிகளே. .

இனவொழிப்பு என்ற வார்த்தையை உபயோகிக்கவே நா கூசுகிறதா இந்திய இறையாண்மைக்கு. .?? காந்தி பிறந்த நாடென்பதை திலீபன் இறந்தபோது எங்கனம் மறந்தீர்கள். .? நேரு வழி இந்தியாவை குடும்ப காலணியாக்கி வைத்தவர்களே, பஞ்சசீல் கொள்கையை எங்கனம் காலில் இட்டு மிதித்தீர்கள். .

மக்களை நோக்கி செல் என்ற மாவொயிசத்தினை இன்று தீவிரவாதிகளாய் பொருள்மாற்றிய தன்னிறைவு கண்டு உங்களுக்கே புல்லரிக்கவில்லையோ. .?ஜனநாயக காலணியிசத்தை மேதாவித்தனமாக கையிலெடுத்து இனவொழிப்புக்கு வித்திட்டீர்கள். . இலங்கை காலப்போக்கில் உங்களைவிட மேதாவியாகிவிட்டது. . நம்மிடம் பணம்,ஆயுதம் வாங்கி சீனாவிடம் தன்னை தாரைவார்த்தது. . இன்று சீனாவிடம் போர்மூளும் என்பதற்காக மன்மோகன்சிங் போலவே மௌனம் காத்து முக்கால்வாசி இனவொழிப்புக்கு விளக்கு பிடித்தீர்கள். .

உள்நாட்டு தீவிரவாதம் என்றீர்கள். .பின் முழு தீவிரவாத குழு என்று தடைசெய்தீர்கள். . உள்நாட்டு விவகாரங்களில் தலையிடத்தானா பஞ்சசீல் கொள்கை எழுத்தப்பட்டு தாள்களும்,மைகளும் வீணடிக்கப்பட்டன. .?
நரகத்திலிருந்து அழைத்து வந்து ராஜிவ் காந்தேயிடம் மரணவாக்குமூலம் வாங்கியிருந்தால் நிச்சயம் விடுதலைப் புலிகளால் சாகிறோம் என்று வருந்தியிருக்க மாட்டார். .!!

SRI_infographic_fig3_B

தியாக தீபம் திலீபனின் கடைசி நாளன்று கூட இந்தியாவிடம் அறவழியில் கெஞ்சியும் செவிசாய்காத காங்கிரஸ் கட்சி எதற்கு காந்தியின் பெயரைச் சொல்லி ஈனப்பிழைப்பு நடத்தவேண்டும். .? ஆயுதப்பயிற்சி தந்து,இனவொழிப்பை வித்திட்ட உம்மிடம் மேதகு பிரபாகரன் கெஞ்சியது பயத்தினால் அல்லவே. .இறையாண்மை கொண்ட ஜனநாயகம் என்பதாலும் தமிழர்கள் அந்த இறையாண்மையின் ஓர் அங்கம் என்பதாலும்தானே. .!!  ஊழல் புகாருக்கா பேனாவில் மையிட எத்தனித்த சட்ட அமைச்சரை மன்னிக்கலாம். .தன் சக உதரன்கள் சாவதைக் கண்டு துப்பாக்கியில் குண்டு நிரப்ப எத்தனிப்பது நக்கீரன் குற்றமோ. .??

அறம்கொண்டிருந்த இந்தியாவில்தான் பகத்சிங் கும் பிறந்தான். . வீரம் என்ற வார்த்தையை மறந்துவிட்டு ஆயுத வல்லரசாக மாற எத்தனிப்பது எவ்வகையில் சாத்தியம். .??

போர்நிறுத்த உடன்பாட்டை பாகிஸ்தான் மீறிவிட்டது என்று மூக்கால் அழுத நீங்கள் இலங்கை அதையே செய்தபோது ஆலோசனை சொல்ல மறந்து கழிவறையில் அமர்ந்திருந்தீரோ. .??

எங்களுக்கே மதிப்பு கொடுக்க வில்லை என்று மூக்கால் அழும் ஆனால் கூட்டங்களுக்கு தெண்டமாக செலவு செய்து கொண்டிருக்கும் பல் இல்லா பாம்பு ஐக்கிய நாடுகள் சபையை யார் சாடுவார். .?  போர்விமானங்கள் குண்டுமழை பொழியக்கூடாத இடங்களை வகுந்திருந்தும் அதை மீறிய குற்றத்தை அறிக்கை கண்டனங்களை மட்டும் வீசி அமைதியான மனித உரிமை ஆணையம் இனி பிணத்தை விசாரணை நடத்தியா தீர்ப்பு வழங்கப் போகிறது. .??

url

ஐ.நா வின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணியாற்றிய கார்டன் வைய்ஸ் என்பவர் THE CAGE என்றொரு நூல் எழுதியிருப்பார். .அதில் தான் இலங்கையில் பணியிலிருந்த காலத்தில் எவ்வாறு நடத்தப்பட்டோம்,இனவொழிப்பு எவ்வாறு நடந்தது என்பதனை பதிவு செய்திருப்பார். .  களத்தில் கூட இல்லாத ஐ.நாவின் திருத்தலைவர் வாய்திறந்தால் வருவது மட்டும்தான் உண்மையா. .??

“சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்”

தமிழ் மறை தந்த ஓர் வெண்பா. .

தமிழ் வாழவேணும். . ஆனால் தமிழன் சாகவேணும் என்று நினைக்கும் தானையத் தலைவர்கள் கிடைத்தது தமிழர்களான நம் அதிர்ஷ்டமே. . தாம் முதலமைச்சர் நாற்காலிக்கு நிற்கும் போது ஈழத்தமிழனின் ஓட்டுகள் உதவாதே என்று புறந்தள்ளிவிட்டீர்களா ஏகாதிபதிய இனவொழிப்புக்கு விளக்கு பிடித்த முன்னாள் முதல்வரே. . தங்களைவிட தமிழை தூயனவாக பேசும் ஈழத்தமிழர்கள் குரல் கோபாலபுரம் வரை எட்டாமல் போயிருக்க வாய்ப்புண்டு. .ஆனால் கெஞ்சிய எங்கள் குரல்கள். .??

மாற்றாந்தாய் மனப்பான்மையின் மறுஉருவாய் திகழ்ந்த தங்கள் நாவிலிருந்தா தமிழின் மறையா வரிகள் ‘பிறப்பொக்கும் எல்லா உயர்க்கும்’ என்ற வார்த்தைகள் உதிரவேண்டும். . ‘யாதும் ஊரே யாவரும் கேளிர் ‘ என்ற வார்த்தைகள் தங்கள் எழுதுகோலிலிருந்து எழுதப்படும் போது வெட்கப் பட்டு உயிர் இழந்திருக்க வேண்டும். .

‘போரைப் புறம் தள்ளி பொருளை பொதுவாக்கவே அமைதி வழிகாட்டும் அன்பு மொழி அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்’ என்று ஏட்டில் எழுதத் தெரிந்த தமிழின் காவலரே. . சொல்லொன்று செய்யும் புறமொன்று என்று தங்கள் மயிருக்கு சமமான மானத்தோடு தமிழையும் கலந்துவிட்டீரே. .

‘டெசோ,”கேட்பதால்” வலிமையற்றதா. .? ‘ என்று தலையங்கம் எழுதும் நீவிர் கதறிய கண்ணீரோடு கெஞ்சல் குரல்கள் ஒலித்த வேளை தங்கள் செவிகளை சாக்கடைக்குள்ளா வைத்திருந்தீர்கள். .?? மொழி பேசுபவர்கள் அழிவதாலேயே அந்த பகுதியில் அம்மொழியும் அழியும் என்பது கூட உங்களுக்கு தெரியாதா அல்லது உங்களுக்கு தெரியாதென்பது மொழியறிஞர் என்ற பட்டம் கொடுத்தவர்களுக்கு தெரியாதா. .?? இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர் பங்கு இல்லையேல் என்னவாகியிருக்கும் என்ற நினைவு மறந்துபோன தமிழை தான் வளர ஏணியாக்கி தமிழனை அழிக்க விளக்குபிடித்த நீவிர்  மாணவர் போராட்டத்திற்கு ஆதரவளித்தால் தங்கள் எண்ணத்தில் உதித்த டெசோ நீர்த்துப் போய்விடும் என்று அமைதிகாக்கும் சந்தர்ப்பவாத அரசியல் தி.மு.க வின் அரசியல் இனிவரும் தலைமுறைக்கு என்றோ புரிந்துவிட்டது என்பதை அவதானியுங்கள். .

இப்பொழுது எழுதவேண்டிய நிர்பந்தம் மனத்தினூடே சிறு கணம் தோன்றி மறைவதால் ..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s