ஈகி முத்துக்குமாருக்கு என் வணக்கங்கள். .
யாதும் ஊரே யாவரும் கேளிர் என விளம்பினான் ஓர் தமிழ்க் கவிஞன். .
செய்யுளின் பொருட்டு மாணாக்கராக இருந்த போது அதை படித்தவர்களும் பெரியவர்களாகிப் போனபின் மறந்தனரோ இல்லை ஏற்க மறுத்தனரோ, தானுண்டு தனதுண்டு என்றே வாழ்ந்து சென்றனர் . .
உண்மை என்பது அவர்களுக்கே வெளிச்சம். .
தலைவலி என்பது வந்தால்தான் அதனால் அவஸ்தையுறுபவன் பற்றி நமக்கு புரிகிறது. .
இதை உணர்ந்து வைத்திருந்தாலும் ஈழ மக்கள் நம்மிடையே பெரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். .
எம் சகோதரர்கள் சாகிறார்களே என நாம் வாய்ச்சவடால் மட்டுமே விட்டுக் கொண்டிருந்த நேரத்தில் செயலில் எதிர்பார்த்து நொந்துக் கொண்டிருந்தனர் உயிரோடவாது இருக்கும் ஏனைய ஈழ உறவுகள். .
இத்துனைக்கும் அவர்களை காப்பாற்றி கரை சேர்ப்பது நம் கடமை எனும் நிலைமை இருந்த வேளையிலே சிங்கள
கயவர்களோடு நாமும் சேர்ந்து ஈழ மக்களை வஞ்சித்த நிலை கண்டு பதறாத சாமான்யன் தமிழகத்தில் இல்லை. .
மௌனம் காப்பதோ,அறைக்கூவல் விடுத்தோ தன வேலையே பார்க்க செல்லாமல் தினம் தினம் அவன் மன அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாது போலும். . தன் உள்மனதின் கெஞ்சலை போராட்டமாக,அறிக்கையாக,வேண்டுதலாக பல கணங்களில் வெளிப்படுத்திப் பார்த்த்தான் எம் சகோதரன் ஒருவன். .நிலை மாறவில்லை. .
கேட்கவேண்டிய காதுகள் வேண்டுமென்றே அடைப்பட்டிருந்தன. .வேண்ட வெறுப்பாக தம் சக சகோதரர்கள் வஞ்சிக்கப்படுவதை எண்ணி எண்ணி மனம் வெறுத்து தன்னையே தீயிலிட்டு தன ஆதிக்க வர்கத்தின் மீதான எதிர்ப்பையும் போர் என்ற பெயரில் மொத்தமாக இன அழிப்பு செபவர்களை தடுத்து நிறுத்த வேண்டியும் இன்னுயிர் ஈந்தான். .
அதை தியாகம் என விளிப்பதா,கோபம் என விளிப்பதா இல்லவேயில்லை அது ஓர் பைத்தியக்காரத்தனம் போன்ற குழப்ப நிலைக்கு தயவுகூர்ந்து செல்லாதீர்கள். .
சட்ட மன்றத்தில் நடந்த அதற்க்கான உரையாடலையோ, தமிழினம் காக்க பிறந்த தலைவர்களின் அறிக்கைகளையோ நினைவுகூறி எம் சகோதரனின் உயிரை அசிங்கப்படுத்த வேண்டாம். .
வழக்கம் போல மனிதனின் உருவத்தை நினைவு கூர்ந்து அவர்தம் படத்திற்கு மாலையிட்டு மகிழ்வதை விட அவரை அதுவரை வாழவைத்த,தன இன்னுயிரை ஈன வைத்த கொள்கை என்ன என்பதை தெரிந்துக்கொள்ளுங்கள், முடிந்தால் நினைவில் நிலை நிறுத்தி கடைபிடியுங்கள். .
அவர்தம் கொள்கைபிடிப்பின் கனத்தை உணர்வோமாயின் அவரின் அந்த செயல் நமக்கு புரியும். .இல்லையேல் போரில் மாண்ட ஆயிரமாயிரமவரில் அவர் உயிரும் மறையைக்கூடும். .
வல்லமை தாராயோ என அவன் புலம்பி தன்னால் ஏதும் செய்ய முடிய வில்லையே என்ற ஏக்கத்தோடே தன்னுயிரை ஈன்றா வது போர் என்ற பெயரில் இன அழிப்பு செய்யும் சிங்கள அரசாங்கத்தை நோக்கி குரல் கொடுக்க திரானியற்ற இந்திய அரசை,தமிழ் வாழனும் தமிழன் சாகனும் என்ற எண்ணம் கொண்டிருந்த தமிழக அரசை கவனிக்க வைக்க இப்படியொரு முடிவெடுத்தான் . .
அவன் மனம் ஈழத்தில் தம் சகோதரர்கள் அழிவதை கண்டு கதறி யிருக்ககூடும். .தன மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரியாமல் அழுதிருக்க வேண்டும். . தன் கொள்கை குரல் கேட்கவேண்டியவர் காதிலும் கேட்காமல் இருந்திருக்க கூடும் . . அந்த முடிவுக்கு நாமும் ஓர் காரணமே. .