அந்த அதிகாலை பொழுது இவ்வளவு அர்த்தமற்றதாக அமையும்என்று அவன் எதிர்பார்க்கவில்லை. .கலைத்துப்போட்ட பொருட்கள் அரை முழுவதும் சிதறிக்கிடந்து கோபமூட்டியது. .
எதோஒரு பெண்ணின்குரல் மெலிதான மல்லியின் அழுத்தத்தைபோல்அவன் மண்டையியினுள் உலவுவதை உணர்ந்தான். . அதிகாலை பறவைகள் சில தம்துணையோடு இரை தேடபறந்துகொண்டிருந்தன . .கசாப்பு கடைகளுக்காக பிடித்துச் செல்லப்படும் சில கோழிகள் மௌனமாய் தம் மரணங்களை எதிர்நோக்கி தவம் செய்வது போலான அமைதியில் நிறைந்திருந்தது. . உணவுப்பழக்கங்களில் தன்னை அடிமை ஆக்கிக்கொண்டு உடம்பு பெருத்து அதனுடன் போராட முடியாமல் சாலைகளில் நடைபழகும் கூட்டமொன்று எச்சில் துப்பி, இக்காலஅரசியலை டீக்கடைகளுக்கு போட்டியாக கிழிதெடுதுக் கொண்டிருந்தது. .
நீர் பிடிக்க வரும் பெண்டிர், பாடம் படிக்கும் பருவதேர்வு உடைய மாணாக்கர், பால் பாக்கெட் ஆசாமியின் வழிநடக்கும் நாளிதழ் போடுபவன், திருப்தியாக உறங்க போகும் இரவு காவலர் தாத்தா, காலடியில் கொஞ்சம் விலகிவிட்ட போர்வையை இழுத்து போர்த்தும் பெரும் போராட்டத்தில் மல்லுகட்டிகொண்டிருக்கும் அரை நண்பன். . துயிலெழுந்த அறுபது வினாடிகளில் புறத்தின் அத்துணை அழகையும் கண்ணில் கண்டு உணர்ந்த அவனால் தன் அக அழுக்கை உணரவே முடியவில்லை. .தான் ஏன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்தோம் என்பதை உணரவே முடியவில்லை . .சுற்றும் மற்றவர்கள் உறக்கதில் திளைப்பதை பார்த்து கோபமும் சுய இறக்கமுமே அவனிடம் மிஞ்சியது . .
ஒரு வாலி நிறைய குளிர் நீரைக்கொண்டு வந்து இன்னும் தூங்குபவர்கள் மீது கொட்டி விடலாமா என்று கூட யோசிக்கும்அளவுக்கு கோபமிருந்தது. .மின்சாரம் நிறுத்தப்பட்டதற்கு அடையாளமாக தூங்காமல், அவனுக்கிருந்த ஒரே துணையான மின்விசிறியும் தன் இயக்கத்தை நிறுத்தி மாண்டது. .
இறுதியாக. .
EBகாரன் சரியா ஒம்போது மணிக்கு புடுங்கிவச்சுடறான். .இன்னும் என்ன தூக்கம் வாழுது என்று நீளும் இலகுவான அந்த குரல் இடியின் பலத்தை கடன் வாங்கி வந்ததைப்போல முழங்க ஆரம்பித்திருந்தது. .