Posts Tagged ‘Articles’

பஞ்சாபில் மாணவி ஒருவர் ஃபேஸ்புக்கில் தன்னை பற்றிய கருத்துகள் காரணமாக தற்கொலை செய்துகொண்ட நிகழ்வினை ஏந்திய
ஓர் பதிவின் தூண்டுதலால் இந்த கட்டுரையை எழுத முனைகிறேன். .
read the news. .

 

 

 

எந்தவொரு இனமும் அடிமை விலங்கை அறுத்தெறிய முற்படும் போது தம்மை ஆதிக்கம் செலுத்தும் விஷயம் மீது குற்றம் கூற ஆரம்பிக்கும். .

அதே உருவகத்தை பெண்களால் உருவாக்கப்பட்டு,வளர்க்கப்பட்டு இன்று சிறிது சிறிதாய் மீண்டும் புணரமைக்கப்படும் வார்த்தையான ‘ஆணாதிக்கம்’ என்பதோடு இணைக்க முற்படுகிறேன். .

ஆண்டாண்டு காலமாக பெண்களை அடிமைகளாய் நடத்தினோம் என்று எந்த ஆணும் மார்தட்டி இன்று கூற முனைவதில்லை. .
பெண்களை உயர்ந்த உயிராக பழைய காலங்களில் மதித்தோம். .பெண்மை என்ற சொல்லுக்கு வலுசேர்க்கும் தாய்மை என்ற வார்த்தைக்காக அனைத்தினும் உயர்வாக எண்ணி மகிழ்ந்தோம். . புராணங்களில் தேவதைகளில் தொடங்கி பராசக்தி என்பது வரை மதிப்பளித்தோம். .
இடைப்பட்ட காலங்களில் பெண்ணடிமைத்தனம் வளர்த்தோம். .விதிகள் விதைத்தோம். . அங்கீகாரம் மறுத்தோம். .
இன்னும் எதை வேண்டுமானாலும் இட்டு நிரப்பிக் கொள்ளுங்கள். .
..
இன்று. . . . .  . . 

கடந்த பதினைந்து ஆண்டுகளாக எல்லா துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி விண்ணைமுட்டி ஆண்களுக்கு எந்த தொழிலிலும் சவால் விடும் அளவு இருக்கிறது. .

ஆயினும்,இன்றளவும் மனோபலத்தை வளர்த்துக்கொள்ளாமல்,சுய நம்பிக்கையை உருவாக்கிக் கொள்ளாமல் செயல்படும் பெண்கள் அதிகளவில் உள்ளனர். .
அத்தகையோருக்குள் மீண்டும் புலப்பட்டு புணரமைக்கப்படும் வார்த்தையே ‘ஆணாதிக்கம்’. .

ஆண்களால் உண்டாக்கப்படும் துன்பங்களுக்கு அணைகட்டி காவல் காக்க பெண்களுக்கு வசதிகள் ஓராயிரம் செய்துவிட்டாயிற்று. .
சரிசமமாக சமுதாயத்தில் பங்குபெற,அங்கம் வகிக்க வழிகள் வகுத்தாயிற்று. .
எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொண்டு சிறு,பெரு தடைகள் வரும்போது ஆண்களை குற்றவாளி ஆக்கி வைப்பது ஏன். .?

பெண்களை அடிமைகளாக பாவித்த காலத்தில் ஆணாதிக்கம் பற்றி பிதற்றியது பொருள்படகூடியது. .
இன்று. .??

பேருந்தில் பெண்களுக்கென ஒதுக்கப்பட்டிரும் இருக்கையில் ஆண்கள் அமர்ந்தால் அது குற்றம். .
ஆண்களுக்கு தனியொரு இட ஒதுக்கீடு கிடையாது. .
அதில் பெண்கள் அமர்ந்தால் கேட்கக் கூடாது. .அது மாபெரும் குற்றமாம். .
ஏழு இருக்கைகள் மட்டுமே ஒதுக்கப்படும் கிராம பேருந்துகளில் கூட சகித்துக்கொள்ளக்கூடிய இது ஒரு பக்கம் முழுவதும் ஒதுக்கப்படும் மாநகரப் பேருந்துகளிலும் தொடர்வது ஏன். .?

ஆண்களின் இருக்கைகளை ஆக்கிரமிக்கும் பெண்களை நோக்கி கேள்வியெழுப்பினால் அது ஆணாதிக்கம் ஆகிவிடுகிறது ஏன். .?

வரதட்சினை கொடுமை தடுப்புச் சட்டம் இயற்றப் பட்டு பல திருத்தங்களுக்கு உள்ளானது யாரால். .?
பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொண்ட பெண்களால்தான். .

பொதுநாகரீகம் பார்க்காமல் சத்தமாக பேசும்,தன் இஷட்த்திற்கு செயல்பட்டு விட்டு போகும் பெண்களை தட்டிக்கேட்டால் அது ஆணாதிக்கமாக மாறிவிடுவது ஏன். .?
ஈவ் டீசிங் புகார் கொடுப்பேன் என மிரட்டுவது என்ன பொருள். .?

பெண்களுக்காக வழங்கப்பட்ட சட்டங்களை,வாய்ப்புகளை துஷ்பிரயோகம் செய்துவிட்டு நிலைமை கைமீறினால் ஆணாதிக்கம் என்ற வார்த்தையை கையிலெடுப்பது தார்மீக குற்றமில்லையா. .?

பெண்கள் வளருவதை யாரும் தடைசெய்யப்போவதில்லை. .தடை செய்தாலும் தட்டிவிட்டு வளரும் பக்குவம் பெண்களிடம் வளர்ந்து வருகிறது என்பதுதான் உண்மை. .

ஆயினும் தன் தவறுகளை மறைக்க ஆணாதிக்கம் என்ற வார்த்தையை கேடயமாக பயன்படுத்துவது தான் இன்று அதிகமாகி விட்டது. .

தன்னை நோக்கி கல்லெறிந்தாலும் தாண்டிச் செல்லும் மனோபக்குவத்தை வளர்த்துக்கொள்ளாமல் எதையும் ஆணாதிக்கம் பற்றியே பேசி நாட்கள் கடத்துவது பயனற்றது. .

சமவாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புலம்பல்கள்தான் ஆணாதிக்கம் என்ற வார்த்தையின் தூண்டுகோலாக மாறுவது ஏன். .?

வெறும் கேடயமாக மட்டுமே பயன்படுத்தப் படும் அந்த வார்த்தையை பாடித்திரிவது பெண்களுக்கே நஷ்டம். .

தங்கள் திறமைகளை பண்புகளை வளர்த்துக்கொண்டு பெண்கள் முன்னேறுவது சாலச்சிறந்தது. . ஆணாதிக்கம் என்ற வார்த்தையை பிடித்துக்கொண்டே வளர நினைப்பது மடமை. .

ஆணாதிக்கத்திம் என்ற ஆதிக்கத்தை எதிர்ப்பதாக நினைத்தே பெண்களும் ஆதிக்க வரம்பில் கால் பதிக்க துவங்கிவிட்டனர். .

மாறப்போகும் காலம் பதிலிடட்டும் இந்த கட்டுரையின் தலைப்புக்கு. .!!