கடல். .

மணிரத்னம் இயக்கம் என்று தெரியவந்ததில் இருந்து எல்லோரும் மிகுதியாகவே எதிர்பார்த்திருந்த படம். . திரைக்கதை அமைப்புக்கும்,உணர்வுமிக்க காட்சிகளுக்கும்,இசையை சரியான விகிதத்தில் பயன்படுத்த தெரிந்த இயக்குனர் என பெயர் பெற்றவரின் படம் என்பதோடும் முந்தைய ராவணன் பெரிதாக எடுபடவில்லை என்பதால் அடுத்த அடியை கவனமாகவே வைப்பார் என்பதும், இசைப்புயல்-வைரமுத்து-மணிரத்னம் -மெட்ராஸ்டாக்கீஸ் கூட்டணி என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளோடு வெளிவந்த படம். .
இன்று. .
கடலில் உப்பில்லை என ஒருசேர விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. .லாஜிக் தவறுகள்,தொடர்பில்லா காட்சிகள் வசனங்களுக்கும் பேசுவோரின் மேனரிசங்களுக்கும் சம்பந்தம் சிறிது விட்டுப்போவது, புரியாத திரைக்கதை என ஏகப்பட்ட விமர்சனங்கள் வைத்தாலும் கடல் என்னளவில் வெறுக்க முடியாத ஓர் படைப்பே. .
மணிரத்னம் மீது வீசப்படும் ஆற்றாமை புகார்களும்,விமர்சனங்களும் சரி, அழகினிலும் அழகு சேர்ந்து கொள்ளை அழகான கதாநாயகியை பேசும்போதும் சரி,இசைப்புயலின் சமாதான பங்களிப்பும் சரி,வைரமுத்துவின் வரிகளுக்கும் சரி. .எல்லோரும் திரைக்கதை அமைத்த எழுத்தாளர் ஜெயமோகனின் பங்களிப்பை மறந்தே விட்டனர். .அது எத்தகைய ஆழமான களம் என்பதையோ அதன் பெருமைகளையோ சொல்லத் தவறிவிட்டனர். .
ஜெயமோகன் இந்த விசயத்தில் தரம் தாழ்ந்திருக்கலாம். .தன பணியை சரிவர செய்யாமலிருக்கலாம் . .ஆனாலும் திரைக்காக எழுதப்படாத ஓர் கதையை திரைக்கதைக்கு உபயோகிக்கும் இந்த முயற்சி ஏற்புடையதே. .
இந்த
சுட்டியை சொடுக்கி ஜெயமோகனே சொல்லியிருப்பதை படியுங்கள். .ஓர் இயக்குனர் தனக்கென ஒரு வகை படங்களை தெரிவு செய்து இயக்கி கொண்டே இருந்தால் கொஞ்ச காலத்திலயே அலுப்பு தட்டி விடும் என்று பேசும் அதே விமர்சகர்கள் தான் மணிரத்தினம் இந்த களத்தில் நின்றதற்க்கோ , கடலிலே இருந்து மீளாமல் மூழ்கி இறந்ததற்க்கோ மீண்டும் முரணாய் விமர்சித்தனர். .
சில கதைகள் கமர்ஷியலை தழுவி எடுக்கப்பட்டு வணிக,ரசிக ரீதியாகவும் பெரும் வெற்றி அடைகின்றன. .சில இதில் ஏதோ ஒன்றில் மட்டுமே ஜெயிக்கின்றன. .ஆனால் அந்த படைப்பை பற்றி எல்லா கோணங்களிலும் பார்வை செலுத்திட மட்டும் மறந்து போகின்றோம். .ஜெயமோகன் சொன்னபடி இந்த
படம் முழுக்க முழுக்க தத்துவார்த்த அடிப்படையே. .
நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டம். .
இதைதானே காலா காலமாக பார்த்து சலித்திருக்கிறோம் என்று ஒற்றை வார்த்தையில் கூறி ஒதுக்கி விட முடியாது. .கலைக்காக,கலையை ரசிக்கும் ரசிகனுக்காக மட்டுமே படம் எடுக்க முனைந்த காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டது. . ரசிகனை எப்பாடுபட்டாவது டிக்கெட் எவ்வளவு விலை ஆயினும் சென்று படம் பார்க்க வைக்க மட்டுமே நடக்கும் சூது தான் இன்று நடப்பவைகள் எல்லாம். .
நன்மை தீமை அவை சார்ந்த நம் செயல் பாடுகள் . .அவை நம் மீது செலுத்தும் ஆதிக்கங்கள். .அதனால் வரும் விளைவுகள். .
நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போராட்டத்தின் பேரலைகளில் சிக்கி தவிக்கும் ஒருவனை தேவதை ஒருவள் வழிநடத்தி கரை சேர்ப்பதே . கதைக் களம் . .அதே களனை அச்சுபிசகாமல் (தழுவலா திருட்டா. .??
பேச்சு வழக்கு . .பூர்விகம் என்பதையெல்லாம் விட்டு விட்டு பார்க்கலாமே. .!) புனையப்பட்ட இந்த முயற்சி வரும்காலத்தில் பலவற்றிற்கு வழிகோலலாம். .
இது படத்தை பற்றிய விமர்சனம் அல்ல. .கேடு கெட்டதாக இருந்தாலும் இந்த முயற்சியை வெறுத்து ஒதுக்க மனம் இல்லை எனக்கு. .
படம் முடிந்து வெளியேறியபின்னும் மணிரத்னத்தின் ரசிகன் என்று சொல்ல எந்த கூச்சமும் இல்லை எனக்கு. .காலம் சொல்லும் கதைகளை படைத்தது அவற்றை காவியமாய் உலவவிட்டவர் சிறிது சருக்கியிருப்பினும் பொறுத்தால வேண்டியது தவறில்லை என்றே எனக்கு படுகிறது. .